Tuesday 7th of May 2024 11:08:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் மரணம்!

தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் மரணம்!


தொரட்டி தமிழ் திரைப்பட கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷமன் மித்ரு பாராட்டுகளையும் பெற்றார்.

கடந்த ஒரு மாத காலமாக கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்தார்.

தமிழக திரைத்துறையில் பலர் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வரும் நிலையில் மற்றொரு மரணமாக இது பதிவாகியுள்ளது.

கொரோனா முதல் அலையின் போது எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். இரண்டாவது அலையில் நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என பலர் உயிரிழந்தனர்.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்றால் காலமானவையும் குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE